Tuesday, May 2, 2017

பாகி டைகர் இஸ் பேக் - பாகி-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு


பாகி டைகர் இஸ் பேக் - பாகி-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு



02 மே,2017 - 15:30 IST






எழுத்தின் அளவு:








சபீர்கான் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் பாகி. டைகர் ஷெரப், ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தனர். இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. டைகர் ஷெரப்பே ஹீரோவாக நடிக்கிறார். அகமது கான் இயக்க உள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், டைகர் ஷெரப், மேல் சட்டையின்றி கையில் துப்பாக்கியுடன் பின்புறமாக திரும்பி உயர்ந்த இடம் ஒன்றில் நிற்க, ஹெலிகாப்டர் ஒன்று உயர எழும்புவது போன்று உள்ளது. கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அந்த போஸ்டரில் வெளியிட்டுள்ளது. அதில் பாகி-2 படம் 2018-ம் ஆண்டு, ஏப்.,27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment