Tuesday, May 2, 2017

நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் விஸ்வரூபம்-2 போஸ்டர்


நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் விஸ்வரூபம்-2 போஸ்டர்



02 மே,2017 - 19:57 IST






எழுத்தின் அளவு:








4 ஆண்டுகாலமாக கிடப்பில் கிடந்த விஸ்வரூபம்-2, உயிர் பெற்றுள்ளது. விஸ்வரூபம்-2 படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டரை கமல் வௌியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பு, இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளிவந்து வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். படத்தின் இரண்டாம் பாகம் அந்தாண்டு இறுதியில் வெளிவரும் என்று அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே முதல்பாகம் இயக்கியபோதே இரண்டாம் பாகத்திற்கான முக்கால்வாசி படப்பிடிப்புகளை நடத்திவிட்டார் கமல்.

விஸ்வரூபம் கொடுத்த வெற்றியால் இரண்டாம் பாகத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க முன்வந்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் விஸ்வரூபம் 2 படம் முடங்கி போனது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம்-2 பிரச்னை சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் ஆரம்பமாகின. விஸ்வரூபம்-2 படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரவு 7 மணியளவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என கமல் கூறியிருந்தார். அதன்படி சரியாக 7 மணியளவில் விஸ்வரூபம் படத்தின் புதிய போஸ்டரை கமல், தன் டுவிட்டர் பக்கத்தில் வௌியிட்டார்.

விஸ்வரூபம்-2 போஸ்டரில் கமல், கம்பீரமாக தோன்றுகிறார். அவர் மேல் தேசிய கொடி போர்த்தியிருக்கிறது. கொடிக்கு மரியாதை செய்வது போன்று கமல் தன் மார்பில் கையை வைத்திருக்கிறார். கமலின் பின்னணியல் டில்லி, இந்தியா கேட் இருக்கிறது. விஸ்வரூபம்-2 படத்தை இந்தாண்டு இறுதிக்குள் வௌியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இடம்பெற்றிருக்கிறது. கூடவே, போஸ்டருடன் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கிறேன் என்று கமல் பதிவிட்டிருக்கிறார்.

தற்போது இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகிறது.


0 comments:

Post a Comment