Friday, November 18, 2016

3 மில்லியன் கிளப்பில் இணைந்த த்ரிஷா


3 மில்லியன் கிளப்பில் இணைந்த த்ரிஷா



18 நவ,2016 - 12:25 IST






எழுத்தின் அளவு:








நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைத்திருக்கும் கணக்குகளை விட நடிகைககள் வைத்திருக்கம் கணக்குகளுக்குத்தான் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. அவர்கள் ஒரு பதிவைப் போட்டால் கூட அதைப் பல்லாயிரம் பேர் 'லைக்' செய்து தங்களது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். டிவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் சில முன்னணி ஹீரோயின்களுக்கு அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து ரசிகர்களிடம் தொடர்பிலும் இருக்கிறார்கள். தங்களைப் பற்றிய செய்திகளைப் பதிவிட்டு ரசிகர்களுடனான நெருக்கத்தை இடைவெளியில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சமந்தா, த்ரிஷா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஹீரோயின்கள் டிவிட்டரில் முழு செயல்பாட்டுடன் இருக்கிறார்கள். இன்றைய இளம் ஹீரோயின்களைக் காட்டிலும் த்ரிஷாவிற்கு டிவிட்டரில் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இன்று அது 3 மில்லியனைத் தொட்டுவிட்டது. ஹீரோயின்களில் சமந்தா ஏற்கெனவே 3 மில்லியனைக் கடந்துவிட்டார். இப்போது அவருக்கடுத்து த்ரிஷாவும் 3 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளார். தமிழ் ஹீரோயின்களில் இவர்கள் இருவர் மட்டுமே 3 மில்லியனைக் கடந்த ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு மேலாகத் திரையுலகத்தில் இருக்கும் த்ரிஷாவுக்கு இன்றும் ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.தற்போது 'சதுரங்க வேட்டை 2, மோகினி' ஆகிய படங்களில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார்.


0 comments:

Post a Comment