
விக்ரமின் மாறுப்பட்ட நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் அந்நியன். (ஜீன் 2005ல் ரிலீஸ்)
இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை விட தெலுங்கில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இதில் இடம்பெற்ற ரெமோ என்ற கேரக்டர் பெயரில் பேருந்துகள் விடப்பட்டன.
கல்லூரி இளசுகளிடம் ரெமோ றெக்க கட்டி பறந்தார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயேன் நடித்துள்ள ரெமோ ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகிற நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதற்கான அறிவிப்பை சற்றுமுன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இதன் தயாரிப்பாளர் ஆர்டி. ராஜா.
அந்நியன் ‘ரெமோ’வை போல் இந்த ‘ரெமோ’ ஆந்திராவை கலக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment