Saturday, November 19, 2016

நயன்தாராவை பின்பற்றும் ஸ்ரீதிவ்யா!









நயன்தாராவை பின்பற்றும் ஸ்ரீதிவ்யா!



19 நவ,2016 - 08:55 IST






எழுத்தின் அளவு:








லேடி சூப்பர் ஸ்டாராகிவிட்ட நயன்தாரா பல இளவட்ட நடிகைகளுக்கு ரோல் மாடலாகி விட்டார். அந்த வகையில், காஷ்மோரா படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ஸ்ரீதிவ்யா, நயன்தாராவுடன் நடித்த அனுபவங்களை பெருமையாக சொல்லி வருகிறார். முக்கியமாக, காஷ்மோரா படத்தில் நயன்தாராவுடன் நான் அதிகமாக இணைந்து நடிக்கவில்லை என்றாலும், படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் எனக்கு சீன் இல்லாதபோதும் அவரை சந்திக்க சென்றிருந்தேன்.

அப்போது, அவர் என்னிடம் பெரிதாக பேசவில்லை. காரணம், அன்றைய தினம் அவருக்கு முக்கியமான எமோசனல் காட்சி படமாக இருந்ததால், அந்த கேரக்டராகவே காணப்பட்டார். அதோடு, கேமரா முன்பு செல்வதற்கு முன்னதாகவே டயலாக் பேப்பரை வாங்கி மனப்பாடம் செய்தபடி அமர்ந்திருந்தவர், கேமரா முன்பு சென்றபோது சிங்கிள் டேக்கில் அந்த காட்சியை ஓகே செய்து கொடுத்தார். அந்த அளவுக்கு கதாபாத்திரத்தோடு அவர் ஒன்றி விடுகிறார். அவரது சின்சியாரிட்டியை பார்த்த பிறகு இனிமேல் ஸ்பாட்டில் தேவையில்லாத அரட்டையடிப்பதை தவிர்த்து அவரைப்போலவே கதாபாத்திரமாக மாறி விட வேண்டும் என்று முடிவு செய்து இப்போது அதன்படியே செயல்பட்டு வருகிறேன் என்கிறார் ஸ்ரீதிவ்யா.




Advertisement








மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாவதில் சிக்கல்?மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாவதில் ... நவம்பர் 25-ல் வெளியாகும் ‛விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்'! நவம்பர் 25-ல் வெளியாகும் ...






0 comments:

Post a Comment