Friday, November 18, 2016

மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாவதில் சிக்கல்?


மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாவதில் சிக்கல்?



19 நவ,2016 - 08:39 IST






எழுத்தின் அளவு:








காஞ்சனா-2 படத்தின் அதிரடி ஹிட்டுக்குப்பிறகு பேய் ட்ராக்கில் இருந்து கொஞ்சம் விலகி ஆக்சன் பக்கம் திரும்பிய லாரன்ஸ், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் தெலுங்கு பட்டாஸ் படத்தின் ரீமேக்கான மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்துள்ளார். சாய் ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நிக்கி கல்ராணி, ராய் லட்சுமி, கோவை சரளா, தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர்.

மேலும், ராகவா லாரன்சின் மற்ற படங்களைப்போன்று காமெடி காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ள இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார் லாரன்ஸ். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். முக்கியமாக, வேந்தர் மூவீஸ் மதன் காணாமல் போனதினால்தான் படம் வெளியாக தாமதம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இதன்காரணமாக, அந்த படம் குறித்து கேட்டாலே கடும் கோபத்துக்கு ஆளாகி விடுகிறாராம் லாரன்ஸ்.


0 comments:

Post a Comment