Friday, November 18, 2016

தனுஷை பாராட்டிய ரஜினி!


தனுஷை பாராட்டிய ரஜினி!



19 நவ,2016 - 09:28 IST






எழுத்தின் அளவு:








பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது என்றொரு படத்தில் முன்பு ரஜினி நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கொடி என்ற படத்தில் அவரது மருமகன் தனுஷ் நடித்தார். கொடி, அன்பு என இரண்டு வேடங்களில் அவர் நடித்திருந்த கொடி படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். இந்த படம் சுமாரான வெற்றிதான் என்றாலும் நல்ல படம் என்கிற பெயரை பெற்றது. தனுஷின் மாறுபட்ட பர்பாமென்ஸை பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் கவனித்து வரும் அவரது மாமனார் ரஜினிகாந்தும், ஒருநாள் தனுஷை சந்தித்தபோது கொடி படத்தில் அவரது பர்பாமென்ஸை பாராட்டினாராம். இனிமேல் சாதாரணமாக இல்லாமல் இந்த மாதிரி வெயிட்டான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்குமாறு தனுஷை கேட்டுக்கொண்ட ரஜினி, கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்குமாறும் கேட்டுக்கொண்டாராம். ஆக, மாமனாரின் பாராட்டு ப்ளஸ் அன்பான அட்வைஸில் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார் தனுஷ்.


0 comments:

Post a Comment