Saturday, November 19, 2016

காமெடியைத் தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக மாறும் ஜி.வி.பிரகாஷ்


201611191551077895_gvprakash-team-up-with-ravi-arasu-for-his-next_secvpfஜி.வி. பிரகாஷ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ‘4ஜி’, ‘சர்வம் தாளமயம்’, ‘அடங்காதே’ ஆகிய படங்களில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.மற்றொருபுறம் ‘புரூஸ்லி’ படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் ‘ஈட்டி’ பட புகழ் ரவி அரசு இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விஜய் சேதுபதியின் ‘றெக்க’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படங்களைத் தயாரித்த கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.


இதுநாள்வரை காமெடி ஹீரோவாக நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ் இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment