
படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக தனுஷ் சமீபத்தில் அறிவித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் வேலையில்லாப் பட்டதாரி-2 வை தனுஷின் மைத்துனி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க அனிருத், ஷான் ரோல்டன் இருவரும் இசையமைக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் ஜோடியாக நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஹீரோயின் குறித்த விவரங்களை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment