Saturday, November 19, 2016

காளிதாஸ் பட பாடலை பேஸ்புக்கில் வெளியிட்டு துல்கர் வாழ்த்து..!


காளிதாஸ் பட பாடலை பேஸ்புக்கில் வெளியிட்டு துல்கர் வாழ்த்து..!



20 நவ,2016 - 08:40 IST






எழுத்தின் அளவு:








ஜெயராம் மகன் காளிதாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மீன்குழம்பும் மண்பானையும்' படம் மிகப்பெரிய வேர்ரிபெராவிட்டாலும் அவருக்கு நல்ல அறிமுகத்தை தந்துள்ளது.. நன்றாக, திறமையாக நடிக்க கூடிய இளைஞன் என்பதயும் வெளிக்காட்டியுள்ளது.. இந்தநிலையில் அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகும் படம் தான் 'பூமரம்'.. இந்தப்படத்தை இயக்குபவர் அப்ரிட் ஷைன்.. ஆம். நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர்தான்.

இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் முக்கியவேடத்தில் நடிக்கிறார். கல்லூரி கேம்பஸை மையமாக வைத்து, சில ஆய்வுப்பணிகள் செய்து இந்தக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் அப்ரிட் ஷைன். சில வாரங்களுக்கு முன் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து காளிதாஸுக்கு தனது வாழ்த்துக்களை சொன்னார் நிவின்பாலி.. தற்போது துல்கர் சல்மான் இன்னும் ஒரு படி மேலாக, இந்தப்படத்தின் முதல் (வீடியோ) பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு காளிதாசுக்கும் இயக்குனர் அப்ரிட் ஷைனுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment