Saturday, November 19, 2016

சினிமா ஹீரோவான கராத்தே வீரர் கெளசிக்!


சினிமா ஹீரோவான கராத்தே வீரர் கெளசிக்!



20 நவ,2016 - 10:41 IST






எழுத்தின் அளவு:








வீரத்தேவன் படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் கெளசிக். வீரன் செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மதுரை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருவா கம்பு சண்டைகள் இல்லாமல், இயல்பான சண்டைகாட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாம்.

அதுபற்றி கெளசிக் கூறும்போது, மதுரை படம் என்றாலே வெட்டு குத்து என அடிதடி படமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் இந்த வீரத் தேவன் படத்தைப்பொறுத்தவரை அந்த மாதிரி எதுவும் இல்லை. யதார்த்தமான கதையோட்டத்தில் லைவான கதையை படமாக்கியிருக்கிறார் டைரக்டர். அதனால் சண்டை காட்சியையும் கம்போஸ் செய்யாமல் இயல்பாகவே படமாக்கியுள்ளார். அந்த வகையில், ஒரு சண்டை காட்சியில் இரண்டுபேர் என்னை தாக்க நான் அவர்களுடன் மோதுவேன். ஒருவருக்கொருவர் கட்டிப்புரண்டு சண்டை போடுவோம். கையில் கிடைப்பதை தூக்கி அடிப்போம். அது நிஜமாலுமே அடித்துக் கொள்வது போல் இருக்கும். இப்படி நாங்கள் சண்டை போட்டதைப்பார்த்து ஏதோ கலவரம் நடப்பதாக எந்த ஏரியா மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் கேமரா இருப்பதை பார்த்து படப்பிடிப்பு என்று புரிந்து கொண்டனர். ஆக்சன் பிர காஷ்தான் இந்த படத்திற்கு சண்டை அமைத்துள்ளார்.

மேலும், எனக்கு கராத்தே தெரியும். கராத்தேயில் நான் போர்த் டான். மொத்தம் கராத்தேயில் பத்து டான் உள்ளது. நான் நான்கு முடித்துள்ளேன். பிளாக் பெல்ட்டுதான் முதல் ஸ்டெப். அந்த வகையில் நான் பிளாக் பெல்ட் வாங்கிய பிறகு 4 வருடம் பயிற்சி எடுத்து இப்போது 4வது டான் வந்துள்ளேன். எனது தந்தை கராத்தே மாஸ்டர் என்பதால் குழந்தையில் நான் விளையாடும் இடமே கராத்தே கிளாஸ்தான். கோபாலன் மாசியல் ஆர்ட்ஸ் அகாடமியை 30 வருடத்துக்கு மேலாக என் தந்தை நடத்துகிறார். இந்தியா முழுக்க வகுப்புகள் நடத்தி வருகிறார். அதில் கற்றுக்கெண்டது சினிமாவுக்கு பயன்படுகிறது. எதிர்காலத்தில் கராத்தே சம்பந்தப்பட்ட கதையில் படம் நடிக்கும் ஐடியாவும் உள்ளது என்கிறார் கெளசிக்.


0 comments:

Post a Comment