Thursday, November 17, 2016

நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு போலீஸ் அனுமதி


நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு போலீஸ் அனுமதி



18 நவ,2016 - 10:25 IST






எழுத்தின் அளவு:








தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு வருகிற 27ந் தேதி லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடக்க இருக்கிறது. இதற்கான அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷருனக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒரு பிரிவினர் "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை ஒரு கல்லூரி வளாகத்தில் கூட்ட அனுமதிக்க கூடாது. சங்கத்தின் முன்னாள் தலைவர், செயலாளர் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. இதனால் அவர்களின் ஆதரவாளர்கள் பிரச்சினை செய்யக்கூடும். இதனால் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அனுமதி தரக்கூடாது" என்று மனு அளித்தனர்.

இரண்டு மனுவையும் பரிசீலித்த போலீஸ் கமிஷனர். எதிர் கோஷ்டியின் மனுவை நிராகரித்தார். லயோலா கல்லூரி வளாகத்தில் பொதுக்குழு நடத்த அனுமதி அளித்திருப்பதோடு போதுமான அளவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார். சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சரத்குமாரும், ராதாரவியும் தாங்களும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றம் மூலம் அனுமதி பெறலாம். அவர்களும் கலந்து கொள்ளலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. முந்தைய பொதுக்குழுவின் போது சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த விஷால் நீதிமன்ற அனுமதியுடன் பொதுக்குழுவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment