Wednesday, November 16, 2016

இளைஞர்கள் அரசியலை விமர்சிக்க மறுக்கிறார்கள்; சீனிவாசன் வருத்தம்...!


இளைஞர்கள் அரசியலை விமர்சிக்க மறுக்கிறார்கள்; சீனிவாசன் வருத்தம்...!



16 நவ,2016 - 15:06 IST






எழுத்தின் அளவு:








படத்திலும் சரி.. நேரிலும் சரி.. மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசுவதில் வல்லவர் மலையாள நடிகரும், கதாசிரியரும், இயக்குனருமான சீனிவாசன்.. குறிப்பாக சமூக பிரச்சனைகளிலும் அரசியல் விவகாரங்களிலும், பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் காரசாரமாக தனது கருத்தை முன்வைப்பார் சீனிவாசன்... அவரது முந்தைய கால படங்களிலும் அரசியல் குறித்த நையாண்டி தூக்கலாகவே இருக்கும்.. அவர் இயக்கிய 'சந்தேஷம்' போன்ற இன்னொரு அரசியல் நையாண்டி படம் இதுவரை வெளியாகவில்லை என எந்த விமர்சகரும் ஒப்புக்கொள்வார்..

ஏன் இந்த நிலை என்று கேட்டால், அதற்கு காரணமாக இன்றைய இளம் படைப்பாளிகள் பக்கம் தான் விரலை நீட்டுகிறார் சீனிவாசன்.. “இன்றைய இளைஞர்கள் அரசியலை மேம்போக்காகவே அனுகுகிறார்கள்.. செய்தித்தாள்களை யாரும் வாசிப்பதாக தெரியவில்லை. ஏன், என் மகன் வினீத் சீனிவாசன் (இயக்குனர்-நடிகர்) கூட இந்த ரகம் தான். அவர்கள் பார்வையில் எது அரசியல் என நினைக்கிறார்களோ அதை ஒட்டியே தங்களது கருத்தை சொல்கிறார்கள். மற்றவர்களின் கோணத்தில் மாற்று கருத்தை கேட்க அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.. அதனால் தான் இப்போது அரசியல் நையாண்டி படங்கள் அவ்வளவாக வருவதில்லை.. வந்தாலும் எடுபடுவதில்லை” என்கிறார் சீனிவாசன்.


0 comments:

Post a Comment