கும்பகர்ணன் போல் தூங்கும் சைப் அலி கான்
16 நவ,2016 - 16:13 IST
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சைப் அலிகான் - கரீனா கபூர். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது . திருமணத்திற்கு பிறகு கரீனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தற்போது கரீனா, கர்ப்பமாக இருக்கிறார், டிசம்பர் மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்துள்ளார் கரீனா. சமீபத்தில் நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற கரீனாவிடம், உங்கள் குழந்தையிடம் எந்த பண்பு இருக்க கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, என் கணவரிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் என் குழந்தைக்கு இருக்க கூடாது என்று கரீனா கூறியுள்ளார். அப்படியென்ன சைப்பிடம் உள்ள கெட்ட பழக்கம்....
இதோ அதற்கு கரீனா அளித்த பதில்..... "சைப் சதா தூங்கி கொண்டே இருப்பார். அவர் ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தூங்குவார். இரவில் தூங்கினார் என்றால் மறுநாள் மதியம் வரை தூங்குவார், இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு கும்பகர்ணன் மாதிரி தூங்குவார். இந்த விஷயம் அவரிடம் எனக்கு பிடிக்காது. என் குழந்தைக்கு அந்த பழக்கம் வரக்கூடாது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment