மணிரத்னத்துக்கு மறுக்கப்பட்ட டூயட்
16 நவ,2016 - 14:05 IST
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் 'காற்று வெளியிடை'. இந்தப்படத்தில் கார்த்தி பைலட்டாக நடிக்கிறார். ஆந்திராவைச் சேர்ந்த அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் சில தினங்கள் நடைபெற்றது. ஊட்டி ஷெட்யூலைத் தொடர்ந்து சமீபத்தில் காஷ்மீரிலும் சில தினங்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்திருக்கிறார் மணிரத்னம்.
இந்தப் படத்தை வழக்கம்போல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி வருகிறாராம் மணிரத்னம். இந்தப்படத்துக்கு தெலுங்கில் 'டூயட்' என்ற பெயர் சூட்டிய மணிரத்னம் தமிழ் வெர்ஷனுக்கும் டூயட் என்ற தலைப்பையே சூட்ட திட்டமிட்டிருந்தார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு, மீனாட்சி சேஷாத்ரி நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் 1994-ல் வெளியான படம் 'டூயட்'.
எனவே இப்போது தனது படத்திற்கு கே.பாலச்சந்தரின் படத்தின் பெயரை தலைப்பாக வைப்பதற்கு கே.பியின் வாரிசுகளிடம் அனுமதி கேட்டிருக்கிறார் மணிரத்னம். என்ன காரணத்தினாலோ அவர்கள் தரப்பில் பாசிட்டிவ்வான பதில் இல்லை. அதன் பிறகே காற்று வெளியிடை என்ற தலைப்பை தமிழுக்கு வைத்துவிட்டு தெலுங்கு வெர்ஷனுக்கு மட்டும் டூயட் என்ற தலைப்பு வைத்தாராம் மணிரத்னம்.
0 comments:
Post a Comment