Thursday, November 17, 2016

சீனியர் நடிகரின் சிகிச்சைக்கு மம்முட்டி உதவி..!


சீனியர் நடிகரின் சிகிச்சைக்கு மம்முட்டி உதவி..!



17 நவ,2016 - 16:06 IST






எழுத்தின் அளவு:








மலையாள சினிமாவில் சீனியர் நடிகர் முன்ஷி வேணு.. 74 வயதான இவர் தற்போது சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கென குடும்பம் எதுவும் இல்லாத நிலையில் கடந்த பத்து வருடங்களாக ஒரு லாட்ஜில் வசித்து வந்தார். இப்போது இவரை அங்கிருந்தும் விரட்டி விட்டார்கள்.. ஒவ்வொரு முறை மருத்துவனையில் டயாலிசிசுக்காக செல்லும்போதெல்லாம் நான்காயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமாம். மாதம் 12 முறை இப்படி செய்யவேண்டும்..

அதுமட்டுமல்ல, விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றார்களாம். இவரின் இந்த நிலை மம்முட்டி ரசிகர் மன்றத்தினர் மூலமாக மம்முட்டியின் காதுகளுக்கு எட்டியது.. இதை கேள்விப்பட்ட மம்முட்டி தனது உதவியாளர்களிடம் முன்ஷிக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.. மம்முட்டியை தொடர்ந்து நடிகர் ராஜீவ் பிள்ளையும் முன்ஷிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.. முன்ஷி மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் உறுப்பினராக இல்லை. அதனால் அவருக்கு நடிகர்சங்கம் எந்த ஒரு உதவியையும் செய்ய முன்வரவில்லையாம்.


0 comments:

Post a Comment