Thursday, November 17, 2016

எப்போதாவது தான் என் கணவர் பாராட்டுவார் - கஜோல்


எப்போதாவது தான் என் கணவர் பாராட்டுவார் - கஜோல்



17 நவ,2016 - 15:44 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு தனியிடத்தை பிடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். அஜய்யை திருமணம் செய்த பின்னர் நடிப்பை கைவிட்டார் கஜோல். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஷாரூக்கானின் ‛தில்வாலே'படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ-என்ட்ரி ஆனார். ஆனால் இப்படம் கஜோலுக்கு தோல்வி படமாகவே அமைந்து.

சமீபத்தில் நடந்த அழகுசாதன பொருட்களின் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கஜோல், தன்னை தனது கணவர் அஜய் எப்போதாவது தான் பாராட்டுவார் என்று கூறினார். இதைப்பற்றி கஜோல் மேலும் கூறியதாவது..."மிகவும் அரிதாக தான் என் கணவர் அஜய், என்னைப்பற்றியும், என் அழகை பற்றியும் பாராட்டுவார். அப்படி அவர் பாராட்டும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் மிகவும் அழகாக இருத்தால் மட்டும் தான் அஜய் என்னை பாராட்டுவார். அப்போதும் கூட அவர் என்னை ‛நீ மிகவும் அழகாக இருக்கிறாய் 'என்று கூறிவிட்டு சென்றுவிடுவார், அவ்வளவுதான்" என்றார்.


கஜோல், தற்போது இயக்குநர் ஆனந்த் காந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை அஜய் தயாரிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment