Thursday, November 17, 2016

ராமாயணம் தொடரில் விபீஷணனாக நடித்த முகேஷ் ராவல் மர்மச்சாவு: தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்


ராமாயணம் தொடரில் விபீஷணனாக நடித்த முகேஷ் ராவல் மர்மச்சாவு: தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்



17 நவ,2016 - 10:57 IST






எழுத்தின் அளவு:








தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் விபீஷணனாக நடித்து புகழ் பெற்றவர் முகேஷ் ராவல். அதன்பிறகு சீரியல்களிலும், திரைப்படங்களிலும் குணசித்ர வேடத்தில் நடித்து வந்தார். மும்பையில் வசித்து வந்த முகேஷ் நேற்று முன்தினம் வங்கியில் ரூபாய் நோட்டை மாற்றச் செல்வதாக கூறி காட்கோபருக்கு சென்றுள்ளார். அன்று முழுவதும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.

இந்த நிலையில் மும்பே மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள காந்தவலி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் உடல் துண்டு துண்டாகி சிதறி கிடந்தது. ரெயில்வே போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து அது முகேஷ்தான் என்பதை உறுதி செய்தனர்.

66 வயதான முகேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரிடமிருந்த பணத்தை பறிப்பதற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில் சிக்கிக் கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


0 comments:

Post a Comment