Monday, May 1, 2017

ஹிந்தியில் மட்டும் பாகுபலி-2 ரூ.127 கோடி வசூல்


ஹிந்தியில் மட்டும் பாகுபலி-2 ரூ.127 கோடி வசூல்



01 மே,2017 - 15:44 IST






எழுத்தின் அளவு:








இந்தியாவிலும் ஹாலிவுட் தரத்திற்கு படங்கள் எடுக்க முடியும் என தனது பாகுபலி படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. முதல்பாகத்தை விட பாகுபலி-2 படத்தை இன்னும் பிரமாண்டமாய் இயக்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் பேச வைத்திருக்கிறார். இப்படம் பிரமாண்டமாக மட்டுமல்லாது வசூலும் மலைக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. ஹிந்தியில் மட்டும் இப்படம் மூன்று நாட்களில் ரூ.127 கோடி வசூலித்திருக்கிது. படம் வெளியான வெள்ளியன்று ரூ.40.50 கோடியும், சனியன்று ரூ.41 கோடியும், ஞாயிறு அன்று ரூ.46 கோடியும் வசூலித்துள்ளது. இதன்மூலம் பாகுபலி-2 படம் தங்கல் படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது. தங்கல் படம் மூன்று நாட்களில் ரூ.106 கோடி வசூலித்தது, இப்போதை அதை பாகுபலி-2 முறியடித்திருக்கிறது. மேலும் இப்படம் இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக ரூ.300 கோடி வசூலித்திருக்கும் என்று கூறுகிறார்கள்.


0 comments:

Post a Comment