ஜாலி எல்எல்பி-2 தெலுங்கு ரீ-மேக்கில் வெங்கடேஷ்
09 மே,2017 - 18:03 IST
ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜாலி எல்எல்பி-2 என்ற பெயரில் உருவானது. இதில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் குவித்தது. இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ரீ-மேக்காக உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமீபகாலமாக ரீ-மேக் படங்களில் நடித்து வெற்றி பெற்று வரும் வெங்கடேஷ், ஜாலி எல்எல்பி-2 ரீ-மேக்கில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாக கூறப்படுகிறது. ஜாலி எல்எல்பி-2 படத்தின் தெலுங்கு ரீ-மேக்கை ராதா கிருஷ்ணன் என்பவர் வாங்கியுள்ளார். முன்னதாக இதில், ரவி தேஜா நடிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment