சர்கார்-3 பால் தாக்ரே கதையல்ல - ராம் கோபால் வர்மா
01 மே,2017 - 14:36 IST
பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா. தற்போது இவர், சர்கார் படத்தின் மூன்றாம் பாகமான சர்கார்-3 படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், யாமி கவுதம், ரோனித் ராய், அமித் ஷாத், ஜாக்கி ஷெரப், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. ஒவ்வொரு முறையும் சர்கார் படம் ரிலீஸாகும் சமயத்தில், இப்படம் பால் தாக்ரே தொடர்புடைய கதை என்ற பேச்சு எழும். அதேப்போன்று இப்போதும் எழுந்துள்ளது. ஆனால் இதை இயக்குநர் ராம் கோபால் வர்மா மறுத்துள்ளார்.
இதுகுறித்து ராம் கோபால் வர்மா கூறியிருப்பதாவது... என்னைப்பொறுத்தமட்டில் காட்பாதர் படம், மாபியா சம்பந்தப்பட்ட படம் அல்ல, அதேப்போன்று தான் சர்கார்-3 படமும் பால் தாக்ரே சம்பந்தப்பட்ட கதை கிடையாது என்று கூறியுள்ளார்.
சர்கார்-3 படம் வருகிற மே 12-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
0 comments:
Post a Comment