Monday, May 8, 2017

`96′ படத்திற்காக விஜய் சேதுபதி, திரிஷாவை தேடும் படக்குழு

மெட்ராஸ் என்டர் பிரைசஸ் எஸ்.நந்த கோபால் அடுத்து தயாரிக்கும் படம் ‘96’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சி.பிரேம் குமார் இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கி கொடுத்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி வெளியானது.

இதன் முதல் கட்டபடப்பிடிப்பு விரைவில் கும்பகோணம் பகுதியில் நடைபெறுகிறது. இதில் இளம் வயது விஜய்சேதுபதி, திரிஷா வேடத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

இன்னும் சில பாத்திரங்களுக்கும் தேவையான நடிகர்களை படக்குழு தேர்வு செய்து வருகிறது. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராகும் பிரேம்குமார் இந்த படத்தில் இயக்கத்தை மட்டும் கவனிக்கிறார். என். சண்முகம் ஒளிப்பதிவு செய்கிறார்.

0 comments:

Post a Comment