Monday, May 15, 2017

ரஜினியுடன் போட்டோ எடுங்க, உறுதிமொழியும் எடுங்க.. – எஸ்பி முத்துராமன்

Rajini SP Muthuramanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு இன்றுமுதல் சென்னையில் நடைபெற்று வருகிறது.


இதற்கான தொடக்க விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்து கொண்டு பேசினார்.


அவர் பேசியதாவது…


“ரஜினிகாந்த் நடிகராக மட்டும் அல்ல, நல்ல நண்பராக உள்ளார்.


எங்களுக்குள் ஒரு சகோதர நட்பு என்றும் உள்ளது.


புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் பார்த்தபோது ரஜினி எப்படி பழகினாரோ இன்றும் அப்படியிருக்கிறார்.


சினிமாவில் நுழைவதற்கு முன்பு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் படிக்கும்போது ஒரு குடிசையில்தான் இருந்தார்.


இன்றும் அவர் வீட்டில் மேல் அதுபோன்ற ஒரு குடிசை இருக்கிறது. எதற்கு ரஜினி என்று கேட்டால், குடிசையில்தானே என் வாழ்க்கை ஆரம்பமானது.


அதை என்றும் மறக்க கூடாது என்றார். அவர் பழசை என்றும் மறக்காதவர்.


இன்று புகழின் உச்சத்தை எட்டிவிட்டாலும் அந்த புகழை தலையில் ஏற்றிக்கொள்ளாத மனிதன் அவர்.


அவர் எப்போதும் பல உதவிகளை செய்துவருகிறார். அது யாருக்கும் தெரியாது. அவர் கொடுத்து பழக்கப்பட்டவர்.


நீங்கள் ரஜினியின் புகைப்படம் எடுக்கும்போது அவருடன் கைகொடுக்க வேண்டாம். அவரது காலில் விழக்கூடாது.


ரஜினியின் போட்டோ எடுப்பது முக்கியமில்லை. எடுத்துவிட்டோம் என்று மற்றவர்களிடம் காண்பிப்பது முக்கியமல்ல.


உங்கள் வீட்டில் அவரது போட்டோ இருக்கும்போது, அதை பார்க்கும்போது அவரைப் போல ஒழுக்கமாக இருக்க வேண்டும்.


அவரை நீங்கள் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டு முன்னேற வேண்டும். இதை உறுதிமொழியாக எடுத்துக கொள்ளுங்கள்” என்றார்.


Fans must learn discipline from Thalaivar Rajini says SP Muthuraman

0 comments:

Post a Comment