மணிரத்னத்தை கவர்ந்த அதிதிராவ்
15 மே,2017 - 12:13 IST
கார்த்தி-அதிதிராவ் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய படம் காற்று வெளியிடை. காதல் கதையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் முதன்முறையா க மீசை இல்லாமல் நடித்திருந்தார் கார்த்தி. அதோடு, பைலட் வேடம் என்பதால் அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பல மாதங்களாக விமான ஓட்ட பயிற்சி எடுத்து நடித்தார் கார்த்தி. ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், தனது அடுத்தபட வேலைகளில் இறங்கி விட்டர் மணிரத்னம். அந்த படத்தை தமிழ், தெலுங்கு என ஒரு இருமொழிகளில் இயக்குகிறார். மேலும், தனது புதிய படத்தில் ரோஜா, பம்பாய் பட நாயகனான அரவிந்த்சாமியை மீண்டும் நாயகனாக்கும் மணிரத்னம், இன்னொரு ஹீரோவாக தெலுங்கு நடிகர் ராம்சரணை நடிக்க வைக்கிறார். இந்த படத்தின் நாயகியாக காற்று வெளியிடை அதிதிராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் மணிரத்னம். காற்று வெளியிடை படத்தில் அவர் கொடுத்த பர்பாமென்ஸ் மணிரத்னத்தை பெரிய அளவில் கவர்ந்ததே இதற்கு காரணமாம்.
0 comments:
Post a Comment