Tuesday, May 9, 2017

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால்

Mohan lal and Peter heinதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.


தமிழில் காக்க காக்க, அந்நியன், சிவாஜி, எந்திரன், 7ஆம் அறிவு, மகாதீரா, பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.


அண்மையில் மோகன்லால் நடித்து வெளியான புலி முருகன் படத்திற்காக சண்டை பயிற்சிக்கான தேசிய விருதை பெற்றார் இவர்.


இந்நிலையில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை இயக்க போகிறாராம்.


இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.

0 comments:

Post a Comment