Tuesday, May 9, 2017

மீண்டும் ஹாலிவுட்டில் சேகர் கபூர்: புரூஸ்லீ வாழ்க்கை கதையை இயக்குகிறார்


மீண்டும் ஹாலிவுட்டில் சேகர் கபூர்: புரூஸ்லீ வாழ்க்கை கதையை இயக்குகிறார்



09 மே,2017 - 11:41 IST






எழுத்தின் அளவு:








பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேகர் கபூர் அவ்வப்போது ஹாலிவுட் படங்களையும் இயக்குவார், எலிசெபத் தி கோல்டன் ஏஜ், நியூயார்க் ஐ லவ் யூ, தி போர் பாதர்ஸ், பேசேஜ் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது அவர் புரூஸ்லீயின் பால்ய பருவ வாழ்க்கையை அதாவது அவர் சினிமாவுக்கு வருவதற்கு முந்தைய அவரது வாழ்க்கையை தி லிட்டில் டிராகன் என்ற பெயரில் படமாக இயக்குகிறார். இதனை புரூஸ் லீயின் சொந்த தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சில சீன நிறுவனங்கள் தயாரிக்கிறது. புரூஸ் லீயின் மகள் ஷானான் லீதான் முக்கிய தயாரிப்பாளர்.

இங்கிலாந்து ராணியின் வாழ்க்கையை துணிச்சலாக எடுத்து விருதுகளை அள்ளிய சேகர் கபூரை, புரூஸ் லீ குடும்பம் இயக்குனராக தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக சீனா சென்ற சேகர் கபூர், புரூஸ் லீ பிறந்த ஊர், படித்த பள்ளி, சண்டை கற்ற இடம் அனைத்தையும் பார்த்து வந்திருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. புரூஸ்லியின் பால்ய பருவ தோற்றம் கொண்ட சிறுவனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment