வாகை சூடவா வா படத்துக்கு பிரெஞ்ச் திரைப்பட விழா விருது
02 மே,2017 - 10:13 IST
களவாணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சற்குணம், அடுத்து இயக்கிய இரண்டாவது படம் வாகை சூட வா. கடந்த 2011ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விமல், இனியா, கே.பாக்யராஜ் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். செங்கல் சூளையில் வாடும் மக்களுக்கு கல்வி அறிவு கொடுக்க போராடுகிற ஒரு இளம் ஆசிரியரின் கதை.
இந்தப் படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றது. சிறந்த பாடகர், பாடலாசிரியர், நடிகை, இசை அமைப்பாளர் ஆகிய 4 பிரிவுகளில் பிலிம்பேர் விருது பெற்றது. நார்வே சர்வதேச திரைப்பட விழா, விஜய் அவார்ட்ஸ் உள்ளிட்ட பல விருதுகளை குவித்தது. தற்போது பிரெஞ்ச் திரைப்படவிழாவில் சிறந்த பியூச்சர் பிலிம் பிரிவில் விருது பெற்றுள்ளது. பிரான்சில் நடந்து வரும் இந்திய திரைப்பட விழாவில் இந்த விருது நேற்று முன்தினம் வாகை சூடவா படத்துக்கு வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment