கௌதமிக்கு வந்த ஞாபகமறதி நோய்..!
09 மே,2017 - 15:40 IST
எண்பதுகளின் இறுதியில் தமிழில் முன்னணி நடிகையாக கோலோச்சிய நடிகை கௌதமி, மலையாளத்தில் கிட்டத்தட்ட 12 படங்களில் நடித்துள்ளார். இடையில் 2003-ஆம் ஆண்டு 'வரும் வருன்னு வன்னு' என்கிற படத்தில் நடித்த கௌதமி, கிட்டத்தட்ட 14 வருடம் கழித்து மலையாளத்தில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே 'விஸ்வாசபூர்வம் மன்சூர்' என்கிற படத்தில் நடிப்பதாக இருந்து, சில காரணங்களால் அந்தப்படத்தில் இருந்து விலகினர் கௌதமி..
தற்போது குக்கு சுரேந்திரன் என்பவர் இயக்கத்தில் 'E' என்கிற ஒற்றை எழுத்தில் உருவாகி வரும் படத்தில் பாட்டு டீச்சராக நடிக்கிறார் கௌதமி.. அதுமட்டுமல்ல இந்த படத்தில் அல்சீமர் என்கிற ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டவாரகவும் இவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம்.. கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு முன் வெளியான 'தன்மாத்ரா' படத்தில் மோகன்லால் இதேபோல அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்து தேசிய விருதும் கூட வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment