Saturday, November 19, 2016

கண்ல காச காட்டப்பாவில் ரூ.100 கோடி கறுப்பு பணம்


கண்ல காச காட்டப்பாவில் ரூ.100 கோடி கறுப்பு பணம்



19 நவ,2016 - 10:19 IST






எழுத்தின் அளவு:








இப்போதைய நாட்டு நிலவரம் "காசு பணம் துட்டு மணி மணி தான்..." எல்லோரும் ஏடிஎம் வாசலிலும், வங்கி வாசலிலும் கால்கடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள். காரணம் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தான்.

இந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி வருகிற 25ந் தேதி ஒரு படம் வெளிவருகிறது. அது கண்ல காச காட்டப்பா. மறைந்த பழம்பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகன் மேஜர் கவுதம் இயக்கி உள்ள இந்தப் படத்தை மலேசியாவைச் சேர்ந்த சுகர் கல்யாண், அரவிந்த், கமலநாதன் இணைந்து தயாரித்துள்ளனர். அரவிந்த் ஆகாஷ், சாந்தினி, அஸ்வதி, எம்.எஸ்.பாபு. யோகி பாபு, விச்சு, நடன இயக்குனர் கல்யாண் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு பெரும் பணக்காரர் தன்னிடம் உள்ள 100 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெளிநாட்டு டாலராக மாற்ற மலேசியாவுக்கு அனுப்புகிறார். மலேசியா வரும் 100 கோடி பல பேர் கைக்கு சென்று விடுகிறது. ஒவ்வொருவரும் அந்த 100 கோடியை லபக்க திட்டமிடுகிறார்கள். பணம் யாருடைய கைக்கு போகிறது என்பதுதான் கதை. முழுநீள நகைச்சுவை சித்திரமாக உருவாகி உள்ளது.


0 comments:

Post a Comment