இரண்டே நாளில் 15 காட்சிகள் ; புலிமுருகன் புதிய சாதனை..!
16 நவ,2016 - 14:50 IST
கடந்த மாதம் (அக்-7) இந்தியாவில் வெளியான மோகன்லாலின் 'புலி முருகன்' படம், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தான், அதாவது கடந்த நவ-3ல் தான் வளைகுடா நாடுகளில் ரிலீஸானது.. இதில் பஹ்ரைன் நாட்டில் உள்ள அல் ஹம்ரா தியேட்டர் இந்தப்படத்தின் ரிலீஸில் புதிய முயற்சியை மேற்கொண்டது.. அது என்ன முயற்சி என்பதற்கு முன் அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். மோகன்லால் நடித்து வெளியான படங்களில் இதுவரை இல்லாத அளவில் 'புலி முருகன்' படம் அனைத்து தரப்பினரையும் வசீகரித்ததால், பஹ்ரைனில் உள்ள இந்த அல் ஹம்ரா தியேட்டர், நவ-3 ரிலீஸ் தினத்தில் இருந்து கூட்டத்தை எப்படி சமாளிப்பது என திட்டமிட்டது..
அதன்விளைவாக 'புலி முருகன்' ஷோவை இடைவிடாது தொடர்ந்து ஓட்டுவது என முடிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரசிகர்களை கட்டுப்படுத்தவும் அவர்களது ஏமாற்றத்தை தவிர்க்கவும் திட்டமிட்டது. அதன்படி கடந்த நவ-3ஆம் தேதி காலை 3 மணி முதல் நவ-5ஆம் தேதி அதிகாலை 3 மணி காட்சி வரை கணக்கில் சேர்த்து மொத்தம் 48 மணி நேரத்தில் 15 காட்சிகளை இடைவிடாது திரையிட்டுள்ளது..
இதில் முதல் இரண்டு காட்சிகள் பஹ்ரைன் மோகன்லால் ரசிகர்களுக்காக மட்டும் திரையிடப்பட்டது.. இந்த சிரபுக்காட்சிகளில் படத்தின் இயக்குனர் வைசாக்கும் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இதுவரை எந்த படமும் இந்த தியேட்டரில் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை என்கிறார் அந்த தியேட்டரில் சுமார் 28 வருடங்களாக வேலைபார்த்து வரும் மேனேஜர் பஹ்ரைனில் உள்ள மோகன்லால் ரசிகர் மன்றத்தினர் இதை விழாவாகவே கொண்டாடிவிட்டனராம்.
0 comments:
Post a Comment