Wednesday, November 16, 2016

தமிழர்களை கொச்சைப்படுத்துகிறதாம்: கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக புகார்









தமிழர்களை கொச்சைப்படுத்துகிறதாம்: கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக புகார்



16 நவ,2016 - 11:01 IST






எழுத்தின் அளவு:








ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் வருகிற 18ந் தேதி வெளிவருகிறது. இதனை ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார். படம் பல்வேறு பிரச்னைகளை தாண்டி இப்போது ரிலீசாகிறது. இந்த நிலையில் இந்தப் படம் தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துகிறது, அதனால் படத்துக்கு தடை விதியுங்கள் என்று தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பு முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கடவுள் இருக்கான் குமாரு என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலரில் "பல கட்சிகள் இருந்தாலும் முதலில் எந்த கட்சியிடம் பணம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடுவதுதான் தமிழர் பண்பாடு, கலாச்சரம்" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. பணம் வாங்கி கொண்டு ஓட்டுப் போடுவது என்பது தமிழர்களின் கலாச்சாரம் என்பதை அந்த வசனம் குறிப்பிடுகிறது. இது உலகமெங்கும் வாழும் தமிழர்களை கொச்சைப்படுத்தி அவர்களின் கவுரவம், நேர்மையை சிதைப்பதாக உள்ளது. எனவே படத்தை தடை செய்வதோடு அதன் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




Advertisement








கமலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ரஜினிகமலை சந்தித்து உடல் நலம் ... திருப்பூரில் உலக திரைப்பட விழா: 5 நாட்கள் நடக்கிறது திருப்பூரில் உலக திரைப்பட விழா: 5 ...






0 comments:

Post a Comment