Wednesday, November 16, 2016

தயாரிப்பாளரின் குடும்ப பிரச்சினையில் பஞ்சாயத்து: கன்னட நடிகர் துனியா விஜய் கைது


தயாரிப்பாளரின் குடும்ப பிரச்சினையில் பஞ்சாயத்து: கன்னட நடிகர் துனியா விஜய் கைது



16 நவ,2016 - 11:45 IST






எழுத்தின் அளவு:








கன்னட நடிகர் துனியா விஜய் எப்போதும் பரபரப்புக்கு பெயர் போனவர். மனைவி அளித்த புகாரின் பேரில் பல முறை கைது செய்யப்பட்டவர். தற்போது அவர் மஸ்திகுடி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இரண்டு சண்டை கலைஞர்கள் ஏரியில் மூழ்கி இறந்ததால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

தயாரிப்பாளர் சுரேஷின் தம்பி சங்கர்.பி கவுடா என்பவருக்கும், சுரேசுக்கும் சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இதில் நடிகர் துனியா விஜய் பஞ்சாயத்து பேசியுள்ளார். அவர் தயாரிப்பாளர் சுரேசுக்கு ஆதரவாக பேசியுள்ளார். பஞ்சாயத்தில் சுரேசின் தம்பி சங்கர் பி.கவுடா அவரது மனைவி மானஷா, மானஷாவின் தந்தை ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பஞ்சாயத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துனியா விஜய், மானஷாவின் தந்தை ஜெயராமை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயராம் அளித்த புகாரின் பேரில் துனியா விஜய்யை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


0 comments:

Post a Comment