Tuesday, November 15, 2016

மீண்டும் ‘பிச்சைக்காரன்’ ஆகும் விஜய் ஆண்டனி?

vijay antonyஇசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.


தனக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து, அதில் வெற்றி வாகை சூடி வருகிறார்.


இவர் நடித்துள்ள சைத்தான் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.


தற்போது ஜீவா ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் எமன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.


இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸாகி தமிழ் மற்றும் தெலுங்கில் சக்கை போடு போட்ட பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


இப்படத்தையும் அதன் இயக்குனர் சசியே இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment