Wednesday, November 16, 2016

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-வரலட்சுமி ஜோடி


vijay sethupathi varalakshmi‘ஸ்டுடியோ 9′ சுரேஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்ட படம் ‘வசந்தகுமாரன்’.


இதில் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க, ஆனந்த் குமரேசன் இயக்கவிருந்தார்.

தொடங்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் நின்றது.

அதில் ஜோடியாக நடிக்க காத்திருந்த விஜய்சேதுபதி மற்றும் வரலட்சுமி தற்போது ஒரு புதிய படத்தில் இணைகின்றனர்.

இதில் மாதவன்-ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகிய இருவரும் மற்றொரு ஜோடியாக இணைகின்றனர்.

ஓரம் போ, வா படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரி இப்படத்தை இயக்குகின்றனர்.

விக்ரம் வேதா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

மாதவன் போலீஸாகவும், விஜய்சேதுபதி டானாகவும் நடிக்கின்றனர்.

முக்கிய வேடத்தில் கிருமி படப்புகழ் கதிர் நடிக்கிறார்.

வினோத் ஒளிப்பதிவு செய்ய ஷாம் இசையமைக்கிறார்.

டிரைடண்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

0 comments:

Post a Comment