சண்டக்கோழி- 2 ட்ராப் இல்லை: ஒளிப்பதிவாளர் தகவல்
15 மே,2017 - 17:52 IST
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக சொல்லப்பட்ட 'சண்டக்கோழி-2' படம் பற்றி திரையுலகத்தினர் மத்தியில் பல்வேறு விதமான தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் சாரம்சம் ஒன்றே ஒன்று தான். அதாவது, சண்டக்கோழி-2 படம் ட்ராப்பாகிவிட்டது. இனி அந்தப் படத்தை எடுக்க வாய்ப்பே இல்லை என்பது தான். இதற்கு காரணமாக பலப்பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் சில லாஜிக்கானவை. சில கட்டுக்கதைகள்.
இந்நிலையில் சண்டக்ககோழி-2 படம் ட்ராப்பாகவில்லை. விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலை சண்டக்கோழி- 2 படம் சம்மந்தப்பட்ட டெக்னீஷியனே தெரிவித்துள்ளார்.
நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில், பன்னீர் செல்வம் இயக்கிய 'ரேனிகுண்டா' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சக்தி. இந்த படத்தை தொடர்ந்து 'வாலு', 'இவன் வேற மாதிரி', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். தவிர, 'குரு' என்ற தெலுங்கு படத்திலும் பணிபுரிந்துள்ளார் சக்தி.
விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் 'கருப்பன்' படத்திற்கு இவர் தான் ஒளிப்பதிவாளர். 'கருப்பன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிக்கும் 'சண்டைக்கோழி-2'வில் ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கிறார் சக்தி. கடந்த 14ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடியபோது இந்த தகவலை சக்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறதாம்.
0 comments:
Post a Comment