ராஜமௌலிக்கு கடும் நெருக்கடி !?
15 மே,2017 - 18:29 IST
ஒரு இயக்குனர் மிகப் பெரும் பெற்றியைக் கொடுத்தாலே நமது ஹீரோக்கள் விட மாட்டார்கள். அவர், உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு உலக மகா வெற்றியைக் கொடுத்தால் என்ன ஆகும். அப்படி ஒரு மகா மகா வெற்றியைக் கொடுத்த ராஜமௌலிக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நெருக்கடியைக் கொடுப்பதே தெலுங்கு ஹீரோக்கள்தான் என்கிறது டோலிவுட் வட்டாரம்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் இப்போதைக்கு இந்தியாவின் தலைசிறந்த வசூல் இயக்குனர் என்ற தனிப் பெரும் பெயரை ராஜமௌலி பெற்றுவிட்டார். அவர் அடுத்து இயக்கும் படம் பற்றி இப்போதே பரபரப்பு எழுந்துவிட்டது. ஆனால், சில மாத ஓய்விற்குக் பிறகுதான் ராஜமௌலி படத்தை இயக்கப் போகிறாராம்.
அதற்குள் அவருடன் இதற்கு முன்பு பணியாற்றிய ஹீரோக்கள், அவருடன் பணிபுரியாத ஹீரோக்கள் என பலரும் அவருடைய அடுத்த படத்தில் நாங்கள் நடிக்கிறோம் என தூது அனுப்பி வருகிறார்களாம். இருந்தாலும் அடுத்த படத்தின் கதையை உருவாக்கிய பின்தான் யார் ஹீரோ என்பதை ராஜமௌலி முடிவு செய்ய உள்ளாராம். இதனிடையே, ஒரு குறுகிய வெளிநாட்டுப் பயணத்தை முடித்து விட்டு வந்த ராஜமௌலி அடுத்த வெளிநாட்டுப் பயணம் போவதற்குள் தன் உதவியாளர்களுடன் கதை விவாதத்தில் உட்கார்ந்துவிட்டார் என்கிறார்கள்.
ராஜமெளலியின் அடுத்த ஹீரோ யார் என்பதில் தெலுங்கு ஹீரோக்களுக்குள் கடும் போட்டி இப்போதே ஆரம்பமாகிவிட்டது.
0 comments:
Post a Comment