Wednesday, May 10, 2017

தனுஷின் ‘வடசென்னை’ படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்

Aishwarya Rajesh tweet about Dhanush project Vada Chennaiவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.


இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக தனுஷ் கலந்து கொண்டு நடித்து வந்தார்.


இந்நிலையில் இதன் சூட்டிங் நேற்றுடன் முடிவடைந்துள்ளது என ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இவர் கேரக்டரில்தான் அமலாபால் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, வெங்கடேஷ் எடிட்டிங் செய்து வருகிறார்.


Aishwarya Rajesh tweet about Dhanush project Vada Chennai

0 comments:

Post a Comment