ரசிகர்களிடம் சிம்பு வைத்த வேண்டுகோள்
21 மே,2017 - 10:45 IST
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொள்வது சகஜமாகி விட்டது. முக்கியமாக விஜய்-அஜீத் ரசிகர்களுக்கிடையேதான் இந்த மோதல் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அதற்கு தடை போட்டும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. அது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. சில சமயங்களில் எல்லை மீறியும் நடந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், ரசிகர்கள் இணையதளங்களில் மோதிக்கொள்வதை தொடர்ந்து கண்காணித்து வரும் சிம்பு, தற்போது தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இணையதளங்களில் ஒருவரையொருவர் தவறாக விமர்சிப்பது, திட்டிக்கொள்வது போன்ற சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். அந்த நேரத்தை நல்ல விசயங்களுக்காக பயன்படுத்துங்கள் என்று வேண்டுகோளாக வைத்திருக்கிறார் சிம்பு.
0 comments:
Post a Comment