ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெலுங்கு நடிகர்
21 மே,2017 - 11:12 IST
பிரபுதேவா நடித்த தேவி படத்தை மூன்று மொழிகளில் இயக்கிய ஏ.எல்.விஜய் தற்போது ஜெயம்ரவி நடிப்பில் வனமகன் படத்தை இயக்கியிருக்கிறார். அந்த படம் முழுக்க வசனமே பேசாமல் நடித்துள்ளார் ஜெயம்ரவி. ரிலீசுக்கு தயாராகி விட்ட இப்படத்தை சினிமா உலகத்தில் ஏற்பட்டுள்ள ஸ்டிரைக் காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதையடுத்து பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களை கொள்ளை கொண்ட சாய் பல்லவியை நாயகியாக வைத்து ஒரு படம் இயக்குகிறார் ஏ.எல்.விஜய். இந்த படத்திற்கு கரு என்று பெயர் வைத்துள்ளார் ஏ.எல்.விஜய். இதில் முன்னணி நடிகர்கள் யாரேனும் ஹீரோவாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது தெலுங்கு நடிகர் நாகா சவுர்யா நாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு ஹீரோ நடிப்பதால் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. மேலும், பிரேமம் படத்தில் நடித்ததை விடவும் இன்னொரு பரிமாணத்தில் ஒரு அழுத்தமான காதல் நாயகியாக சாய் பல்லவி தமிழில் என்ட்ரி கொடுக்கிறாராம்.
0 comments:
Post a Comment