கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்திய தீபிகா படுகோனே
20 மே,2017 - 13:59 IST
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு மூன்று இந்திய நடிகைகளுக்கு கிடைத்துள்ளது. அதில் தீபிகா படுகோனே குறிப்பிடத்தக்கவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது பச்சை நிற உடையணிந்து அழகு மிளிற காட்சி கொடுத்துள்ளார் தீபிகா. அப்போது அவரது கண்ணழகு, காதணி அழகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், தான் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்கு முன்பு, அங்கு கூடிநின்ற புகைப்பட கலைஞர்களுக்கு விதவிதமான போஸ் கொடுத்த தீபிகா படுகோனே கேன்ஸ் சிவப்பு கம்பளத்தின் மீது தனது ஆட்டோகிராப்களை எழுதியுள்ளார்.
0 comments:
Post a Comment