Saturday, May 20, 2017

விஷாலின் வேலை நிறுத்த போராட்டம் : தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் கைவிரிப்பு


விஷாலின் வேலை நிறுத்த போராட்டம் : தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் கைவிரிப்பு



20 மே,2017 - 17:34 IST






எழுத்தின் அளவு:








விஷால் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கபோவது இல்லை என தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் அறிவித்துள்ளது. திருட்டு விசிடி ஒழிப்பு, இணையதளத்தில் படங்கள் திருட்டுத்தனமாக வெளியீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 30ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் வேலை நிறுத்ததிற்கு ஒத்துக் கொண்ட தியேட்டர் அதிபர்கள் சங்கம் பிறகு பின் வாங்கிவிட்டது. பெப்சியும் வேலை நிறுத்ததில் கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கவில்லை. பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து அதை வெளியிட தயாராக இருக்கும் நிறுவனங்களும் வேலை நிறுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் மைய குழு கூட்டம் அதன் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 30ந் தேதி வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ் திரைப்பட வர்த்தக சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... "தமிழக முதல்வரிடம் நேரில் சென்று திரை உலக குறைகளை சொன்ன உடனேயே அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். அதனால் வரும் 30ம் தேதி மாத்திரமல்ல வேறு தேதியிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம். தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் சங்கமும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பும் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம் என்று அறவித்துள்ளது போல் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது".

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தலைவர் அபிராமி ராமநாதன், எஸ்.தாணு, அன்புச்செழியன், சரத்குமார், ராதாரவி, எஸ்வி.சேகர், பன்னீர்செல்வம், கே.முரளீதரன், சிவசக்திபாண்டியன், டி.சிவா, ஏஎல்.அழகப்பன், டிஜி.தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சித்ராலட்சுமணன், கேஎஸ்.சீனிவாசன், விஜயகுமார், தனஞ்ஜெயன், பிரமிட் நடராஜன், சீனிவாசன், சுந்தரேசன், மூர்த்தி மற்றும் ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment