Saturday, May 13, 2017

நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் ஜோடி விஜய்


Dulquer Salmaan to romance with Keerthy Sureshசாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகவுள்ளது.


‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதனை நாக் அஷ்வின் இயக்குகிறார்.

தற்போது இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் சாவித்ரியின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷும், ரிப்போர்டராக சமந்தாவும் நடிக்கின்றனர்.

‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

இந்நிலையில், சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா என்ற தெலுங்கு நடிகர் நடிக்கிறாராம்.

பெல்லி சொப்புலு என்ற ஒரு படத்தின் மூலம் நிறைய இளம் ரசிகைகளை இவர் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda romance with Samantha for Savitri Biopic



0 comments:

Post a Comment