Tuesday, May 2, 2017

அப்பா ஆனார் பாபி சிம்ஹா


அப்பா ஆனார் பாபி சிம்ஹா



03 மே,2017 - 10:25 IST






எழுத்தின் அளவு:








தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் பாபி சிம்ஹா. அதன் பிறகு குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரேஷ்மி மேனனை காதலித்தார். இருவருமே பிற்காலத்தில் திரைப்பட நட்சத்திரங்களானார்கள், நேரம், ஜகிர்தண்டா படங்கள் பாபி சிம்ஹாவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. இனிது இனிது, பர்மா, மாயா, கிருமி, உறுமீன் படங்கள் ரேஷ்மி மேனனை நட்சத்திரமாக்கியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு ரேஷ்மி மேனன் நடிப்பதை நிறுத்தி விட்டார். பாபி சிம்ஹா, கோ 2, பாம்பு சட்டை என்று தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது வல்லவனுக்கு வல்லவன், திருட்டுபயலே 2ம் பாகம், கருப்பன் படங்களில் நடித்து வருகிறார். ரேஷ்மி கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் கூட அவருக்கு வளைகாப்பு நடந்தது.

இந்நிலையில், நேற்று ரேஷ்மி மேனன் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பாவான பாபி சிம்ஹா நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு கொடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் மனைவி ரேஷ்மி மேனனுடன் எடுத்துக் கொண்ட செல்பியையும் வெளியிட்டுள்ளார் பாபி சிம்ஹா.


0 comments:

Post a Comment