Tuesday, May 9, 2017

ஸ்கிரிப்ட் வைத்து தொகுத்து வழங்கினால் ஆடியன்ஸ் கலாய்ப்பார்கள்! -தொகுப்பாளர் கமல்


ஸ்கிரிப்ட் வைத்து தொகுத்து வழங்கினால் ஆடியன்ஸ் கலாய்ப்பார்கள்! -தொகுப்பாளர் கமல்



10 மே,2017 - 10:14 IST






எழுத்தின் அளவு:








ஜீ தமிழ் சேனலில் அதிர்ஷ்டலட்சுமி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் கமல். இந்த நிகழ்ச்சியில் மகேஸ்வரியுடன் இணைந்து கலகலப்பாக தொகுத்து வழங்கி வருவதால், பெண்கள்-சிறுவர்கள் என நிறைய ரசிகர்கள் தனக்கு கிடைத்திருப்பதாக சொல்கிறார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், ஜீ தமிழ் சேனலில் அதிர்ஷ்டலட்சுமி நிகழ்ச்சிக்கு நல்ல ரேட்டிங் உள்ளது. இந்த நிகழ்ச்சி இன்னும் 3 மாதத்திற்கு இப்படியே செல்லும். அதன்பிறகு மாற்றம் வர வாய்ப்பு உள்ளது. இது வாரத்தில் 2 நாட்கள் ஒளிபரப்பாகிறது.

மேலும், என்னைப்போன்ற தொகுப்பாளர்களுக்கு ஜீ தமிழில் நல்ல சுதந்திரம் கொடுக்கிறார்கள். குறிப்பாக, ஒரு ஸ்கிரிப்ட்டை கொடுத்து விட்டு இப்படித்தான் பேச வேண்டும் என்று கண்டிசன் போடுவதில்லை. நிகழ்ச்சிக்கேற்ப, பங்கேற் கும் விஐபிக்களுக்கேற்ப நீங்களாகவே பேசிக்கொள்ளுங்கள் என்கிறார்கள். அதனால், அதை உணர்ந்து தேவையான விசயங்களை பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்துகிறோம்.

என்னுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் மகேஸ்வரியும் அப்படித்தான். என்னை விட சீனியர். நல்ல ஜனரஞ்சகமாக பேசக்கூடியவர். அதனால், அவருக்கேற்ப நானும் பேசி அதிர்ஷ்டலட்சுமியை மக்கள் ரசிக்கும் நிகழ்ச்சியாக நடத்தி வருகிறோம். நாங்கள் காமெடியாக மற்றவர்கள் ரசிக்கும் வகையில் பேசுவதால், இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

அதோடு, இன்றைக்கு ஆடியன்ஸ் ரொம்ப ஷார்ப். ஆரம்ப காலத்தை மாதிரி ஸ்கிரிப்ட் வைத்து தொகுத்து வழங்கினால், என்னமா நடிக்கிறான்டா என்று சொல்லி கலாய்ப்பார்கள். அதனால் நமக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதன்படி பேசி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கூறும் கமல், ஜீ தமிழில் தற்போது நேயர்கள் ரசிக்கும் வகையிலான பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருவதால், ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது ஐந்து மடங்கு டிஆர்பி அதிகரித்துள்ளது என்கிறார்.


0 comments:

Post a Comment