ராஜமவுலியை இம்ப்ரஸ் செய்த இந்தி நடிகர் ரன்வீர்சிங்
10 மே,2017 - 10:10 IST
பாகுபலி-2 படத்தை இயக்கி உலக அளவில் புகழ் பெற்றிருப்பவர் ராஜமவுலி. பத்தே நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் சாதனை புரிந்துள்ள அப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஒரு படத்திற்காக 5 வருடங்களாக கடினமாக உழைத்து வந்த ராஜமவுலி, தற்போது வெற்றியை கொண்டாடி வருகிறார். விரைவில் 1000 கோடி வசூல் சாதனையை முன்வைத்து வெற்றி விழா கொண்டாட்டங்களும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ராஜமவுலியின் அடுத்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த சில செய்திகளும் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே பிரபாசுக்குப் பிறகு ராஜமவுலியை அதிகமாக இம்ப்ரஸ் செய்தவர் இந்தி நடிகர் ரன்வீர் சிங் என்றும், அதனால் அவரது அடுத்த படத்தில் ரன்வீர் சிங் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிக இருப்பதாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
அதோடு, பாகுபலியைப் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அந்த படத்தை இயக்க ராஜமவுலி திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த பிரபாஸ், அடுத்து இரண்டு வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்த பிறகு மீண்டும் அவரை வைத்து ஒரு படம் இயக்க ராஜமவுலி திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment