Saturday, May 13, 2017

கண் பார்வையற்றவராக தன்ஷிகா


கண் பார்வையற்றவராக தன்ஷிகா



13 மே,2017 - 14:57 IST






எழுத்தின் அளவு:








பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான் என பல படங்களில் நடித்தாலும் தன்ஷிகாவுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் கவனஈர்ப்பு கிடைத்தது கபாலி படத்தில்தான். ரஜினியின் மகளாக நடித்தாலும், கபாலி படத்துக்குக் கிடைத்த அபரிமிதமான விளம்பர வெளிச்சம் தன்ஷிகா மீதும் விழுந்தது. அதன் பிறகே தன்ஷிகாவுக்கு தொடர்ந்து படங்கள் தேடி வந்தன.

அவர் நடித்த எங்கம்மா ராணி படம் கடந்த வாரம் வெளியானது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக சிறப்பாக நடித்திருந்தார். தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்து வந்த தன்ஷிகா இப்போது மலையாளம், கன்னடம் என்று பிற மொழிகளிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

விக்ரம் நடிக்க, தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான 'டேவிட்' படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இவர் இயக்கும் மலையாள படம் 'சோலோ'. இந்தப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடக்கிறார். ஆட்டோகிராப் படத்தைப்போல் நான்கு கதைகளாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் ஒரு கதையில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்கிறார். இது தன்ஷிகா நடிக்கும் முதல் மலையாள படம். இதில் கண் பார்வையில்லாத டான்சராக நடிக்கிறார் தன்ஷிகா!

இந்த படம் தவிர சமுத்திரக்கனி இயக்கும் கிட்ணா படமும் மலையாளத்திலும் தயாராக இருக்கிறது. இதற்கிடையில் 'உத்கர்ஷா' என்ற கன்னட படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் அறிமுகமாகவிருக்கிறார் தன்ஷிகா!


0 comments:

Post a Comment