Monday, May 15, 2017

‘படம் ரிலீஸின் போது பரபரப்பை ஏற்படுத்த அவசியம் எனக்கில்லை..’ ரஜினி


Superstar Rajini speech at fans meeting Photo shootமே 15 ஆம் தேதி இன்றுமுதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ரஜினிகாந்த்.


இச்சந்திப்பு தற்போது ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டோ எடுப்பதற்கு முன் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது…

என் உடன் பிறவா சகோதரர். என் மற்றொரு அண்ணன் எஸ்பி முத்துராமன் அவர்களிடம் இருந்துதான் நான் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன்.

அவர் இயக்கிய ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில்தான் முதன்முறையாக ஹீரோவாக நடித்தேன்.

அப்போது நான் சூட்டிங்கு லேட்டாக செல்வேன். ஒரு நாள் என்னை கூப்பிட்டு, நீ இப்போ ஹீரோ.

நீ லேட்டா வந்தால், எல்லாரும் லேட்டாக வருவார்கள். நீ முதலில் வரவேண்டும் என்றார்.

அன்றுமுதல் இன்றுவரை சூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக நான் செல்கிறேன்.

என்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் நான் பரபரப்புக்காக ஒன்றை செய்கியேன் என்கிறார்கள்.

அப்படி செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
என்னுடைய ரசிகர்கள், என்னை வாழவைக்கும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

என் படத்தை நம்பி நீங்கள் வருவீர்கள். முடிந்தவரை உங்களை ஏமாற்றாமல் நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்.” என்று கூறினார் ரஜினி.

Superstar Rajini speech at fans meeting Photo shoot

0 comments:

Post a Comment