Sunday, May 14, 2017

ரசிகர்களை சந்திக்க துவங்கினார் ரஜினி


ரசிகர்களை சந்திக்க துவங்கினார் ரஜினி



15 மே,2017 - 09:14 IST






எழுத்தின் அளவு:








நடிகர் ரஜினி சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரசிகர்களை சந்திக்கிறார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த சந்திப்பில், ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இன்று முதல் மே 19 வரை தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். மாவட்டத்திற்கு 200 பேர் வீதம் மொத்தம் 600 ரசிகர்களுடன் ரஜினி இன்று போட்டோ எடுத்துக் கொள்கிறார். கரூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இன்று போட்டோ எடுக்க உள்ளனர். ரஜினியை சந்திப்பதற்காக ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment