Sunday, May 14, 2017

சிம்பு படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்


சிம்பு படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்



14 மே,2017 - 13:28 IST






எழுத்தின் அளவு:








த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'.

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது.

இதில் முதல் பாகத்தை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அடுத்த (ஜூன்) மாதம் 23ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

இரண்டாம்பாகத்தை கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிட்டுள்னர். இதை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவுடன் ஜி.வி.பிரகாஷ் குமாரும் தற்போது இணைந்துள்ளார்.

இந்த தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் சிம்பு.

ஆனால் ஏஏஏ படத்தில் சிம்புவுடன் ஜி.வி.பிரகாஷ்குமார் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? இல்லை பாடல் பாடியிருக்கிறாரா என்பது பற்றி தெளிவான தகவல் தெரியவில்லை.

ஏஏஏ படத்தில் சிம்பு உடன் ஒரு பாடல்காட்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து நடனம் ஆட இருப்பதாக சிம்புவுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் நெருக்கமானவர்கள் சொல்கின்றனர்.

படம் குறித்த ஒவ்வொரு தகவல்களையும் ட்விட்டரில் வெளியிட்டு பப்ளிசிட்டி தேடுவது தற்போது வழக்கத்தில் உள்ளது. எனவே இது குறித்த விளக்கமும் விரைவில் ட்விட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


0 comments:

Post a Comment