Sunday, May 14, 2017

‘இறந்தபின் அம்மாவை போற்றுவதில் பலனில்லை…’ ராகவா லாரன்ஸ்

lawrance mother kanmaniநடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சென்னை அம்பத்தூர் பகுதியில் ஸ்ரீராகவேந்திரருக்கு கோயில் கட்டியிருக்கிறார்.


தற்போது அந்த கோயிலுக்கு எதிராக, தனது அம்மா கண்மணிக்கும் ஒரு கோயில் கட்டியுள்ளார்.


இந்த உலகத்தில் எவரும் தன் அம்மாவுக்கு இதுவரை கோயில் கட்டியதாக தெரியவில்லை.


அதுவும் தன் தாய் உயிரோடு இருக்கும்போது, கோயில் கட்டிய முதல் நடிகர் இவர் மட்டும்தான்.


அவர் அம்மா கண்மணியின் சிலை 5 அடி உயரத்திலும், காயத்ரி தேவியின் சிலை 13 அடியிலும் நிறுவியுள்ளார்.


இன்று நடந்த கோயில் திறப்பு விழாவில் சூப்பர் சுப்பராயன், தயாரிப்பாளர் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், இயக்குனர் சாய்ரமணி, லாரன்சின் தம்பி எட்வின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த லாரன்ஸ் கூறியதாவது…


அம்மா இருக்கும்போதே அவருக்கு கோயில் கட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.


அம்மா இறந்தபின் அவரை போற்றுவதில் எந்த பயனும் இல்லை.


இந்த கோயில் உலகத்தில் உள்ள அனைத்து தாய்களுக்கும் சமர்ப்பணம்.


48 நாட்கள் முடிந்த பிறகு சினிமா மற்றும் என் நண்பர்களை அழைத்து ஒரு விழா நடத்தவிருக்கிறேன்.” என தெரிவித்தார்.


Raghava lawrence opened new temple for his mother Kanmani


lawrance mother temple

0 comments:

Post a Comment